தனியார் பள்ளிகளில் நாளை முதல் இலவசமாக கல்விக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி

தனியார் பள்ளிகளில் நாளை முதல் இலவசமாக கல்விக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு கீழ், மாணவர்கள் இலவச சேர்க்கை நடைபெற நாளை முதல் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் கீழ் இருக்கும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இலவசமாக ஏழை குழந்தைகளுக்கு சேர்க்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டது. … Read more

இன்று (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.73-க்கும்,டீசல் விலை 73.56- ற்கும்  இன்று விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.73-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: கோவையில் பெட்ரோல் விலை … Read more

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு! கோவை பொறியாளரான எஸ் பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ” அவரது மகன் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதியுள்ளான் எனவும் அதில் 11 வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை 24ஆம் தேதி தொடங்கப்படும் என்பதனால் மற்ற மாணவர்களின் முடிவுகளை போலவே தனித்தேர்வு எழுதிய மாணவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இந்த பாரபட்சங்கள் … Read more

விவசாயிகளுக்கான மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் முறைகேடு!

விவசாயிகளுக்கான மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் முறைகேடு!

விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசு கிசான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காக கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவிகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் அல்லாத சிலர் கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி ஊக்கத்தொகை பெற்றதாக புகார் எழுந்தது.   அதனடிப்படையில் விசாரித்தபோது கள்ளக்குறிச்சியில் உள்ள கிசான் … Read more

4694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகள்!!

4694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகள்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை … Read more

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!   ஊரடங்கை சரியாக பின்பற்றாத பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் இவ்வளவு வேகமாக இந்தியாவில் பரவியது என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. ICMR இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் பல்ராம் பார்கவா, மக்கள் முககவசம் அணியாமலும்,சரியான சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதனால்தான் நாளுக்குநாள் இந்தியாவில் கொரோனா பரவுதலின் வீரியம் அதிகரித்து வருகின்றது என்று,சிறியவர்கள் பெரியவர்கள்,இளைஞர்கள் என்று யாரையும் குறிப்பிடாமல் பொதுவாக பொறுப்பற்ற மக்களால் … Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பித்திருந்த மாணவர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கீழேகொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. … Read more

கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு,இனி அபராதம் விதிக்கப்பட திட்டமிட்டுயுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தை பொருத்த வரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனாவை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபொழுதிலும்,தமிழக அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுளுக்கு, பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு எண்ணிக்கை, தினம் தினம் உயர்ந்த வண்ணமே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 379385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6517 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு விதித்த … Read more

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 107 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,998 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?   இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்களாளும்,கட்சித் தொண்டர்களாளும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இவரின் பிறந்தநாளிருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளரும்,விஜயகாந்தின் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், “கேப்டன் விஜயகாந்தை இனி கிங்காக பார்க்க தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.”இதைத் தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் … Read more