கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து குணமாகி சென்ற 20% பேர் வேறு விதமான உடல்நலப் பிரச்னைகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது சிலருக்கு இதய பிரச்னை, நிமோனியா, ரத்தம் கட்டுதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எனவே, … Read more

நீதிமன்றங்களை திறக்க பார் கவுன்சில் சார்பாக கோரிக்கை

நீதிமன்றங்களை திறக்க பார் கவுன்சில் சார்பாக கோரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சென்னை உயர் நீதிமன்றம் , உயர் நீதிமன்ற மதுரை கிளையும், கீழமை நீதிமன்றங்களும் வழக்கமான செயல்படாமல் ஊடங்கால் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து தற்பொழுது வரை 150 நாட்களுக்கு மேற்பட்ட நாட்களில் வந்த வழக்குகளை தீர்க்காமல் அப்படியே இருப்பதனால் தேக்கம் அதிகமாக உள்ளதென்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அவர்கள் கூறினார். இருப்பினும் மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் திறந்து நேரடி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.ஆனால் … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தமிழகத்தில் திருவாரூர்,காஞ்சிபுரம், சென்னை,திருவண்ணாமலை, வேலூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று … Read more

திமுகவின் மரபுகளை தவிடுபொடியாக்கிய ஸ்டாலின்! மரபுகளை மீறி தேசிய கொடி ஏற்றம்

திமுகவின் மரபுகளை தவிடுபொடியாக்கிய ஸ்டாலின்! மரபுகளை மீறி தேசிய கொடி ஏற்றம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவால் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மரபுகளை மீறி தற்போதுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தேசியக்கொடியினை நேற்று ஏற்றி உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால் அங்கு திமுகவின் தலைவர்கள் அதனை ஏற்றுவதில்லை. தேசியக்கொடியினை அமைப்புச் செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் ஆகியோரில் யாராவது ஏற்றுவது தான் திமுகவின் மரபாக இருந்து வந்தது. மேலும் அறிஞர் அண்ணாவும், … Read more

மார்ச் மாதம் முதல் வழக்குகள் தேக்கம்.. நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தல்!!

மார்ச் மாதம் முதல் வழக்குகள் தேக்கம்.. நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தல்!!

கடந்த மார்ச் மாதம் முதல் வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளதால், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் வழக்கமான … Read more

அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?

அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பில்லி சூனியம் போன்றவற்றில் மிகவும் நம்பிக்கை உடையவர்கள்.இதனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு பூஜை நடந்து கொண்டிருக்கும்.இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வீட்டில் இருந்த 60 மற்றும் 30 வயதுடைய இரண்டு பெண்களும்,40 வயது மதிப்புடைய ஒரு ஆணும்,10 வயது சிறுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிய வருகிறது.இவர்களில் 4 பேரின் உடலும் வீட்டின் பின்புறம் கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் … Read more

இன்று (16.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (16.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (16.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் நேற்று பங்குச்சந்தை இறக்கத்தில் முடிந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எவ்வித மாற்றமுமின்றி அமைந்தது. அதன்படி இன்று (16.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 94 ஆகவம் விற்கப்படுகிறது. கோவையில் இன்று லிட்டருக்கு … Read more

இந்தியாவிற்கு இது சுதந்திர தினம் அல்ல கருப்பு தினம்! ட்ராபிக் ராமசாமி ஆவேச பேச்சு!

இந்தியாவிற்கு இது சுதந்திர தினம் அல்ல கருப்பு தினம்! ட்ராபிக் ராமசாமி ஆவேச பேச்சு!

இந்தியாவில் சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று சுதந்திர தினத்தை இந்தியாவில் மக்கள் அனைவரும் கொண்டாட கொரோனா தாக்கத்தால் பெரும் விழாவாக கொண்டாட முடியவில்லை. இருப்பினும் ஆங்காங்கே மக்கள் அவர்கள் இருப்பிடத்தில் இருந்தபடி கொண்டாடினர். இந்த நிலையில் சுதந்திர தினம் குறித்து ட்ராபிக் ராமசாமியிடம் கருத்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று என்பது ஒரு நோயே அல்ல. அது மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தொற்று வியாதி. அந்தக் காலத்தில் … Read more

தொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?

தொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?

2020-2021ஆம் சண்டைக்கான புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட ஈராண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்? முதுநிலை பொறியியல்,முதுகலைப் பட்டம் பெற்றவர்,முதுநிலை அறிவியல் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் இந்த தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் துறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி தொகையாக வழங்கப்படும்.இந்த பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் … Read more

பொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இணையவழி சேர்க்கை கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இணைய வழியிலேயே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த இணைய வழி கலந்தாய்வில் தற்போது வரை 1.53 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.23 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். … Read more