கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!

0
100

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!

 

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தக்காளிகள் திருடு போனதையடுத்து இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார் அளித்துள்ளார்.

 

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வொரு நகரத்திலும் தக்காளி விலை தங்கத்தின் விலை போல ஏறிக்கொண்டு உள்ளது.  மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் தக்காளி பெட்ரோலின் விலையை விட அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

 

மாநில அரசுகளும் தங்களால் முடிந்தவரை தக்காளி விலையை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றது. சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான தக்காளியின் விலை அதிகரிப்பு நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு பண்ணையில் விவசாயி வைத்திருந்த தக்காளிகள் திருடு போனதாக தகவல் கிடைத்துள்ளது.

 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் பண்ணையில் தககாளிகளை வைத்திருந்தார். சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளிகள் திருடு போனதை அறிந்த விவசாயி மன வேதனை அடைந்துள்ளார். இது தொடர்பாக அந்த விவசாயி போலிஸில் புகார் அளித்த நிலையில் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

 

Previous articleநான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள்! டிரெண்டிங்கிள் மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி!!
Next articleதல டோனியின் “பிறந்தநாள்” கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!! “77” மற்றும் “52” அடியில் கட் அவுட்!!