தல டோனியின் “பிறந்தநாள்” கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!! “77” மற்றும் “52” அடியில் கட் அவுட்!!

0
38
Thala Tony's
Thala Tony's "BIRTHDAY" CELEBRATION started by fans!! Cut out below “77” and “52”!!

தல டோனியின் “பிறந்தநாள்” கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!! “77” மற்றும் “52” அடியில் கட் அவுட்!!

கிரிக்கெட் என்றாலே சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக நம் அனைவருக்கும் தெரிந்தது தல தோனி தான். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் கேப்டன் எம்எஸ் தோனி வென்று சாதனை படைத்துள்ளார்.

இவரைப்பற்றி பல்வேறு செய்திகள் கூறிக்கொண்டே இருக்கலாம். இவருக்கென்று இல்லாத ரசிகர்களே இல்லை. டோனியின் ஒவ்வொரு போட்டியிலும் இவர் எப்பொழுது களமிறங்கி ஹெலிகாப்டர் சிக்ஸ் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வண்ணம் இருப்பர்.

இவருக்கு 41 வயதான போதும் தற்போது நடந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஐந்தாவது கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். மேலும் விராட் கோலி, ஜடேஜா, ரோகித் ஷர்மா, அஷ்வின், ஹர்திக் பாண்டியா என அனைத்து மூத்த வீர்களின் வளர்ச்சிக்கு பின்னால் தோனி இருக்கிறார்.

தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஓய்வு பெற்றபோதும் கூட இவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் காதல் இன்னும் குறையவே இல்லை.

அந்த அளவிற்கு இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சென்னைக்கு எதிரணியாக இருக்கும் மக்கள் தோனிக்காக மஞ்சள் கோடி ஏந்தி வரவேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த வகையில் தற்போது தோனி தன்னுடைய 42 வது பிறந்த நாளை நாளைய தினம் கொண்டாட இருக்கிறார். இவருக்கு காயம் ஏற்பட்டு தற்போது குணமடைந்த நிலையில் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவரின் பிறந்தநாளை எப்போதுமே இவருக்கு முன்பாக இவரது ரசிகர்கள் கொண்டாட துவங்குவர். அந்த வகையில் இன்று ஹைதராபாத்தில் இவருக்கு 52 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஆந்திர மாநிலத்திலும் 77 அடியில் கட் அவுட் வைத்து கொண்டாடுகின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் டோனியை கொண்டாடுவது ரசிகர்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
CineDesk