தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.
இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறிஇருந்த நிலையில், அடுத்து 24 மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், நாகலாந்து, ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் மிகவும் அதிகமான கனமழை பெய்யும் என்றும்,
அதேபோல் உத்தரகாண்ட், சத்தீஷ்கர், பீகார், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இடி மின்னலுடன் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள சென்னை, நாகப்பட்டினம், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி போன்ற ஏழு துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும் படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.