அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!

நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம்.

நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட காலமாக வங்கியில் தூங்கி கொண்டிருக்கும் நகைகளை விரைவில் மீட்டு விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*கண்ணடி பவுல்

*கல் உப்பு

*மஞ்சள் தூள்

*குங்குமம்

*வெள்ளை பேப்பர்

*எலுமிச்சம் பழம்

பரிகாரம் செய்யும் முறை…

ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் கல் உப்பு நிறைத்து அதன் மீது சிறிது மஞ்சள் தூள் தூவி சிறிது குங்குமம் தூவவும்.

ஒரு சதுர வடிவ கொடு போடாத வெள்ளை பேப்பரில் நான்கு மூலையிலும் மஞ்சள், குங்குமம் தடவி நீங்கள் அடகு வைத்த நகைகளின் பெயர்கள், அதன் சவரன் அளவுகள், அது அடமானம் வைத்து இருக்கும் வங்கி அல்லது தனி நபரின் பெயர்கள், மொத்த சவரன் அளவுகள், மொத்த தொகை அனைத்தையும் எழுதி மடித்து அந்த உப்பின் மீது வைக்கவும்.

அதன் மீது ஒரு எலுமிச்சை வைத்து விடவும். இதை அப்படியே பூஜை அறையில் வைத்து தூப தீபம் காட்டி மனதார அடகு நகையை விரைவில் மீட்க வேண்டும் அன்று வேண்டிக் கொள்ளவும்.

எலுமிச்சையை காய்ந்தவுடன் மாற்றவும். உப்பை ஒரு மாதத்திற்கு பிறகு மாற்றவும். பழையதைத் தண்ணீரில் கரைத்து விடவும் (பாத்திரம் கழுவும் சிங்கில் ஊற்றவும்).

தினமும் விளக்கேற்றி வழிபட்டு வர விரைவில் நகையை மீட்க வழி பிறக்கும்.