படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!!

Photo of author

By Jayachandiran

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!!

Jayachandiran

படிக்க பணம் இல்லை..! வேதனையில் எலிமருந்து சாப்பிட்ட மாணவனுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்.! பொதுமக்கள் பாராட்டு..!!

சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் என்பவர் சென்னை நெற்குன்றத்தில் இருக்கு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி, நுங்கம்பாக்கம் தனியார் கல்லூரியில் இளங்கலை 3 ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது குடும்ப பொருளாதாரம் வறுமையின் காரணமாக மிக மோசமான நிலையில் இருந்ததால், தேர்வுக்கான பணத்தை செலுத்த முடியாமல் வேதனையடைந்தார். இந்நிலையில் படிப்பை தொடரமுடியாத விரக்தியில் சரவணன் எலிமருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாணவரின் தற்கொலை சம்பவம் குறித்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் கோயம்பேடு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மாணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் விடுதியை நோக்கி போலீசார் விரைந்து, சரவணனை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சைக்கு பிறகு மாணவர் குணமடைந்தார்.

இந்நிலையில், மாணவரிடம் தற்கொலை குறித்து விசாரிக்கப்பட்டது. தேர்வுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றாக மாணவன் தெரிவித்தார். இதனையடுத்து மாணவர் சரவணனின் தேர்வு கட்டணத்திற்காக தனது 4000 ரூபாய் சொந்த பணத்தை இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் செலுத்தினார். மாணவருக்கு ஆறுதல் சொல்லி, அறிவுரை கூறி படிப்புக்கு உதவிய இன்ஸ்பெக்டரை கமிஷனர் உட்பட பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.