வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா!

0
71

வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா!

சேலம் மேட்டூர் அணையில் மழைக் காலங்களில் நிரம்பி வழியும் உபரி நீரை சரபங்கா பகுதி ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் திட்டத்திற்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீலையில் மேட்டூர்-சரபங்கா திட்டத்திற்கு வழிவகுப்பதாக சட்டசபையில் எடப்பாடி தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த  பொதுப்பணித்துறை சார்பில் துரிதமான  ஆய்வு மேற்கொண்டு மேடு பள்ளமான பகுதிகளை மட்டப்படுத்தவும் மற்றும் நீர்வளத்துறையின் மூலமாக உபரிநீரை கொண்டு செல்ல திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையும் அரசு அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர்-சரபங்கா நீரேற்றும்  திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டத்தின் இருப்பாளி கிராமத்தின் அருகே உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் இன்று நடைபெற இருக்கிறது.

இத்திட்டத்திற்காக 565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா பகுதியில் பல்வேறு ஏரிகளில் நிரப்பப்பட உள்ளது. இதன் பயனாக மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம், ஓமலூர், செங்கவல்லி மற்றும் எடப்பாடி உள்ளிட்ட ஒன்றிய தொகுதிகள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் இவற்றின் தாலுக்காவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

ஏற்கனவே, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அளவை எடுக்கும் பணியும், அடுத்தகட்ட நடவடிக்கையும் நடந்து வருகிறது. அண்மையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கையை அதிமுக அரசு உறுதி செய்துள்ளது.

author avatar
Jayachandiran