மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கான பல ஆலோசனைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கலை கல்லூரி மற்றும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பாராமெடிக்கல் கலந்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இது குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கு இலவசமாக அழைப்பு விடுத்து ஆலோசனை செய்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து மருந்தாளர் மற்றும் நர்சிங் தெரபி படிப்பதற்கான கலந்தாய்வானது வரும் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக ஹோமியோபதி ஆணையரகமானது தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடங்களில் அதிகமாக தேர்ச்சி பெற்றவர்கள் அரசின் ஆயுஸ் மெடிக்கலில் இரண்டாம் ஆண்டுக்கான மருந்தாளர் மற்றும் நர்சிங் தெரபிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 26 ஆம் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in என்ற இணையத்தில் இதற்கு உண்டான படிவம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ 350 கட்டணமாக செலுத்தி இது குறித்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்பு அந்த விண்ணப்ப படிவத்தில் தங்களது தகவல்களை அளித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையரங்கத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த படிவத்தை 04.10.2023 அன்று மாலை 5 மணி தான் இறுதி நாள் என்று கூறியுள்ளனர்.