எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்

Photo of author

By Vinoth

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்

Vinoth

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்

உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்வு ஒன்றில் ப்ளூடூத் ஹெட் செட் உதவியுடன் மாணவர்கள் மோசடி செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை Lekhpal ஆட்சேர்ப்பு தேர்வு நடந்தது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 501 மையங்களில்  கிட்டத்தட்ட 2.50 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மோசடியான வழிகளைப் பயன்படுத்தியதாக மாணவர்கள் 21 பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்தது.

முதலில் கைது செய்யப்பட்டவர்கள் பிரயாக்ராஜ், அங்கு நரேந்திர குமார் படேல் மற்றும் சந்தீப் படேல் ஆகியோர் காரில் அமர்ந்து காகிதத்தை எழுதிக்  கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக இரகசிய தகவலை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவல்களின் படி கான்பூர், லக்னோ, மொராதாபாத், வாரணாசி, கோண்டா மற்றும் பரேலி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து கைதுகளுக்கு கொண்டு சென்றுள்ளது. கைது செய்யப்பட்ட அனைத்து தேர்வாளர்களிடம் இருந்தும் புளூடூத் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணையில், மாபியா கும்பல், ப்ளூடூத் கருவிகளை தேர்வர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. சாதனம் மிகவும் சிறியதாக இருந்தது. அதனால் காதுக்கு வெளியே தெரியவில்லை. சாதனத்தின் மைக் ஏடிஎம் கார்டு போன்ற சிப்பில் பதிக்கப்பட்டது. இந்த அட்டை உடுப்பில் கழுத்தின் கீழ் பணியனுக்குள் வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.