இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0
94

இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

இனி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகையை வருகை பதிவேட்டில் பதிவு செய்யக்கூடாது.TNSED செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.பள்ளி கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில்,முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் கடந்த 15 மற்றும் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள், அனைத்து முதன்மை மாவட்ட அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையின் படி வழக்கமான வருகை பதிவேட்டில் ஆசிரியர்களும், மாணவர்களும் வருகையை பதிவிட கூடாது என்றும்,ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து TNSED செயலியில் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்,விடுப்பு,
மருத்துவ விடுப்பு,தற்செயல் விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி இந்த செயலில் பதிவிட வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்கள்,பள்ளி பணியாளர்கள் மற்றும் பள்ளி தரவுகளை உள்ளிடவும்(data update),மேலும் அதனை கண்காணிக்கவும்,பள்ளி தலைவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பிற பயனாளர்களால் இந்த இந்த செயலி பயன்படுத்தப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra