மாணவர்களே நாளை விடுமுறை கிடையாது..!! அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Photo of author

By Vinoth

மாணவர்களே நாளை விடுமுறை கிடையாது..!! அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Vinoth

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், நாளை (மார்ச் 22) சனிக்கிழமை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை (மார்ச் 22) வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை பாட அட்டவணை அடிப்படையில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இதனால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.