News, Breaking News, National

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!!

Photo of author

By CineDesk

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!!

CineDesk

Button

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள,

மைசூர் மாவட்டத்தில் இருக்கின்ற குன்ட்லுபெட் தாலுக்காவில் கரகனஹள்ளி மொரார்ஜிதேசாய் என்ற உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில், காரமான உணவை சாப்பிட்டு அதனால் ஏழு மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளியில் தக்காளி சாதம் சாப்பிட்ட ஏழு மாணவர்களுக்கு வாயிற்று வலி, வாந்தி போன்ற சில உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக அங்குள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்கள் அனைவரும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறி உள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

இவர்களின் இந்த நிலைக்கு அப்பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்களின் அலட்சியம் தான் காரணம் என்று அனைவரும் குற்றம் கூறி வருகின்றனர். மேலும், இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவர்களுக்கு இவ்வாறு உயிருக்கு போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை தயாரிக்கும் போது கவனமாக செய்து சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும் என்று அரசால் எச்சரிக்கப்படுகிறது.

“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!!

மக்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு!!