ஆபத்தை உணராத மாணவிகள்!!பொதுமக்கள் கடும் வேதனை!.மாணவர்களுக்கு இணையாக மாறும் மாணவிகள்?
கோபி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கல்லூரிக்கு மாணவிகளின் வசதிகளுக்கு ஏற்ற வகையில் ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்க வருகின்றார்கள்.வெகு தொலைவில் இருந்து வரும் மாணவிகளின் வசதிக்காக அவர்களுக்கென ஒரு பேருந்தையும் தமிழக அரசு நிறுவியது.
அதும் காலை கல்லூரி வேலை நேரம் மற்றும் மாலை நேரங்களிலும் இதற்கென அரசு பேருந்து செயல்படுகிறது.இந்த ஒரே பேருந்தில் மட்டும் ஏராளமான மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் 24 ஆம் எண் அரசு பேருந்தில் மாணவிகள் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வந்தார்கள்.
சிறிது கூட அச்சம் இல்லாமல் சில மாணவிகள் படியில் நின்று பயணம் செய்து வருகிறார்கள்.இதனை கண்ட பொது மக்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் போலீசாருக்கும் மற்றும் பொதுமக்களிடையே சில கேள்விகள் எழுந்துள்ளது.
அது என்னவென்றால் படியில் நின்று பயணம் செய்யும் மாணவிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனுமதிக்கலாமா? மாணவிகளை உள்ள வர சொல்ல மாட்டார்களா?என மக்கள் மத்தியில் சில கேள்விகள் எழுப்புகின்றனர்.எனவே உடனே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.