வெற்றிகரமாக நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்! நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!!

0
245
#image_title

வெற்றிகரமாக நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்! நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!!

நேற்று(நவம்பர்1) நடைபெற்ற லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய ரசிகர்கள் எதிர்பார்த்த குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியானது. இதையடுத்து லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று(நவம்பர்1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.

நடிகர் விஜய், திரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், லலித் குமார், ஜார்ஜ் மரியம், அர்ஜூன், மடோனா செபஸ்டியன், மன்சூர் அலிகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் மிஸ் செய்த நடிகர் விஜய் அவர்களின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் லியோ சக்ஸஸ் மீட்டுக்கு குவிந்தனர்.

குட்டி ஸ்டோரியை செல்வதற்கு நடிகர் விஜய் அவர்கள் மேடையில் ஏறி நின்று நான் ரெடி தா வரவா என்ற பாடலை பாடி பேச்சை தொடங்கினார். வழக்கம் போல இந்த முறையும் நடிகர் விஜய் அவர்கள் ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி கூறினார்.

நடிகர் விஜய் அவர்கள் இந்த முறை கூறிய குட்டி ஸ்டோரி “ஒரு காட்டுக்குள் இரண்டு பேர் வேட்டைக்கு செல்கின்றனர். காடுன்னா காக்கா, கழுகு, மான் இதெல்லாம் இருக்கும். அதற்கு சொன்னேன். இரண்டு பேரில் ஒருவர் வில் அம்பு எடுத்து செல்கிறார். மற்றொருவர் ஈட்டியை எடுத்துச் செல்கிறார்.

வில் அம்பு கொண்டு சென்ற ஒரு நபர் முயலுக்கு குறிவைத்தார். இதையடுத்து குறிவைத்து முயலு வேட்டையாடி வேட்டையாடி கொண்டு வந்தார். ஈட்டியை கொண்டு சென்ற மற்றொரு நபர் யானைக்கு குறி வைத்தார். ஆனால் யானை சிக்கவில்லை. வெறும் ஈட்டியுடன் திரும்பி வந்தார்.

இதில் வெற்றி பெற்றவன் யார். வேட்டைக்கு சென்று முயலு வேட்டையாடி கொண்டு வந்தவன் தான் வெற்றியாளர் என்று நினைக்கலாம். ஆனால் அப்படி இல்ல. அங்கு யானைக்கு முயற்சி செய்தவர் தான் வெற்றியாளர். யானையை வேட்டையாட முடியாது என்று தெரிந்தும் யானைக்கு குறிவைத்து பெரிய வெற்றியை பெற நினைத்து முயற்சி செய்த அந்த நபர் தான் வெற்றியாளர்.

நம்மால் எந்தவொரு விஷயத்தை எளிமையாக ஜெயிக்க முடியுமோ. அதில் ஜெயிப்பது உண்மையான வெற்றி இல்லை. நம்மால் ஜெயிக்கவே முடியாது என்பதில் முயற்சி செய்து ஜெயித்துக் காட்டுவது கூட வேண்டாம். அதில் ஜெயிக்க முயற்சி செய்வதும் கூட வெற்றி தான்.

உங்களுடைய லட்சியத்தை அடைய பெரிதாக வைய்யுங்கள். பெரிதினும் பெரிது கேள் பெரிதாக கனவு காணுங்கள் நண்பா” என்று நடிகர் விஜய் அவர்கள் நேற்று(நவம்பர்1) நடைபெற்ற சக்ஸஸ் மீட் நிழ்ச்சியில் ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி கூறியுள்ளார்.

Previous articleஆதார் அட்டை கொடுங்கள் 1 கிலோ வெங்காயம் ரூ 25 வாங்குங்கள்!! அரசின் அசத்தல் ஆப்பர்!!
Next articleபிக்பாஸ் ஐஷூ ஆளு இவருதானா! அப்போ நிக்சன் நிலைமை !!