இந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது

0
119

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதுவரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன. சீன தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கத்தில் உள்ளது. இதனால் சீன தரப்பு புலம்பி வருகிறது. இதுபற்றி சீன வர்த்தகத்துறை அதிகாரி காவ் பெங் கூறும்போது, “இந்தியா சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்” என்று கூறினார்.

Previous articleஉத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்
Next articleபாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?