வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! பயணிகள் பதற்றம்!!

Photo of author

By CineDesk

வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! பயணிகள் பதற்றம்!!

CineDesk

Sudden fire accident in Vande Bharat train!! Passengers are nervous!!

வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! பயணிகள் பதற்றம்!!

இன்று அதிகாலை சுமார் 5.40 மணி அளவில் வந்தே பாரத் ரயிலானது போபால் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. பிறகு காலை 8.30 மணிக்கு இந்த வந்தே பாரத் ரயில் குரவாய் கெதோரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் 14 ஆவது பெட்டியின் அடிப்பாகத்தில் திடீரென்று தீ பிடித்தது.

இவ்வாறு பெட்டி தீ பிடிக்க ஆரம்பித்ததும், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் வெளியேறினர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், தீ அணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் ரயிலின் 14 ஆவது பெட்டியில் பற்றிக் கொண்டிருந்த தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுந்தது.

இது குறித்து பேசிய ரயில்வே துறை அதிகாரிகள், பெட்டியின் அடிப்பாகத்தில் இருந்த பேட்டரியினால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறி உள்ளனர். மேலும், சரியான நேரத்தில் இந்த தீயை கவனித்ததால் பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டதாகவும் கூறி உள்ளனர்.

இந்த விபத்து குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு இன்னும் சில மணி நேரங்களிலேயே ரயில் புறப்படும் எனவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு ரயில்களில் இதுப்போல தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் வந்தே பாரத் ரயில்களில் இதுப்போல தீ விபத்து ஏற்படுவது இதுதான் முதல் முறை ஆகும்.