தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!

0
43
The price of tomatoes keeps increasing!! Even today, people are dissatisfied with the price increase!!
The price of tomatoes keeps increasing!! Even today, people are dissatisfied with the price increase!!

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!! 

மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று மேலும் ரூ.10 விலை அதிகரித்து உள்ளது.

தற்போது மக்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை உயர்வு தான். அதிலும் குறிப்பாக தக்காளி விலையின் உயர்வு தான் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துக் கொண்டே செல்கிறது.

நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை என்றால் அது தக்காளி விலை உயர்வு தான். நாடு முழுவதிலுமே தக்காளி விலையானது உச்சத்தில் தான் உள்ளது. பல மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு தற்போது தக்காளி விற்பனை சென்று கொண்டுள்ளது என்பதில் மிகையில்லை.

அனைத்து விதமான சமையலிலும் பயன்படுத்தப் படும் முக்கியமான ஒரு காய்கறியான தக்காளியின் விலை உயர்வால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். பலர் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த காயான தக்காளி தற்போது அவர்கள் நெருங்க கூட முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையாக இருக்கும்  காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.குறிப்பாக  காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது.  சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலையானது  தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒருகிலோ தக்காளி இன்றைய நிலவரப்படி ரூ. 11 0க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி தற்போது 10 ரூபாய் உயர்ந்து ரூ.120 க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையாக  மற்ற பகுதிகளில் ஒரு கிலோ ரூ.150 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. மேலும் சின்ன வெங்காயம் ரூ.௨௦ குறைந்து ரூ.180 க்கு விற்கப் படுகிறது.