அஜீரணக் கோளாறுகளால் அவதியா? அதற்கு பயன் தரும் சூப்பரான மருந்து இதோ!

Photo of author

By Sakthi

அஜீரணக் கோளாறுகளால் அவதியா? அதற்கு பயன் தரும் சூப்பரான மருந்து இதோ!

அஜீரணக் கோளாறு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும் வகையில் இந்த பதிவில் ஒரு. மருந்துப் பொருள் தயார் செய்வது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.

நம்மில் ஒரு சிலருக்கு அஜீரணக் கோளாறு பிரச்சனை இருக்கும். அதாவது சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் அதாவது சரியாக கரையாமல் இருக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும் வகையில் இந்த பதிவில் சூப்பரான மருந்து தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* சதக்குப்பை செடி விதைகள்
* கோரைக்கிழங்கு
* நிலவேம்பு
* வசம்பு

செய்முறை…

மேற்கண்ட சதக்குப்பை விதைகள், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, வசம்பு ஆகிய நான்கு பேருக்கும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து நான்கையும் ஒன்றாக இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்த பின்னர் இடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

சில நிமிடங்கள் கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கி அதை ஒரு டம்ளரில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இளஞ்சூடாக ஆறிய பின்னர் இதை குடிக்கலாம்.

இதை தொடர்ந்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு குணமாகும். அதே போல வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். மேலும் உடல் வலிமை பெறும்.