Home Health Tips சொத்தை பல் வலியால் பெரும் அவதியா? இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்க!

சொத்தை பல் வலியால் பெரும் அவதியா? இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்க!

0
சொத்தை பல் வலியால் பெரும் அவதியா? இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்க!
#image_title

சொத்தை பல் வலியால் பெரும் அவதியா? இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்க!

செத்தை பல் வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு அற்புதமான மருந்து என்றால் அது குப்பைமேனி கீரை தான். குப்பை மேனி கீரை குப்பை மேடுகளில் கிடைக்கும். இந்த கீரையை பலவிதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். குப்பை மேனி கீரையை காயகல்ப மூலிகை ஆகும்.

இந்த குப்பை மேனி கீரையை களைச் செடியாக நினைத்து பலரும் பிடுங்கி எறிந்து விடுவார்கள். ஆனால் இந்த குப்பை மேனி கீரையின் அனைத்து பாகங்களும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. இந்த குப்பை மேனி கீரையை பல்வலி உள்பட நூறு எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

* குப்பை மேனி கீரையின் சாறு பிழிந்து குடித்தால் சளி பிடித்திருந்தால் அடியோடு குணமாகும். மேலும் இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

* குப்பை மேனி கீரையின் சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் சூடும் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.

* குப்பை மேனி இலையின் சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறி விடும். வயிற்றுப் புழுக்களை ஒழிக்க நாம் குப்பை மேனி இலைப் பொடியையும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

* குப்பை மேனி இலையை இடித்து சாறு பிழிந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதே போல குப்பை மேனி கீரை சைனஸ் என்ற நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* சொத்தைப் பல் வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு அல்லது மூன்று குப்பை மேனி இலை கீரையை எடுத்து சுத்தம் செய்து அதை நசுக்கி வலி உள்ள சொத்தை பல் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி குறைந்து விடும்.

* குப்பை மேனி கீரையின் இலைகளுடன் மஞ்சள் மற்றும் கல்லுப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, படை, அரிப்பு உள்ள இடங்களில் வைத்து கழுவி வந்தால் அனைத்து சரும பிரச்சனைகளும் சரியாகும்.

* உடல் வலியால் அவதிப்படுபவர்கள் அனைவரும் குப்பை மேனி இலையின் சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து தேய்க்க உடல் வலி குணமாகும்.

* மூட்டு வலி உள்ளவர்கள் அனைவரும் குப்பை மேனி இலையின் சாறு எடுத்து அதனுடன சுண்ணாம்பு கலந்து மூட்டுகளில் தேய்த்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

* தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்து விட்டால் குப்பை மேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.