வெயில் காலம் தொடங்கி விட்டது! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

Photo of author

By Sakthi

வெயில் காலம் தொடங்கி விட்டது! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

வெயில் காலம் தொடங்கி விட்டால் நாம் நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். என்னதான் நாம் பார்த்து பார்த்து உணவுகளை சாப்பிட்டாலும் சில உணவு வகைகள் நம்முடைய உடலின் வெப்பத்தை அதிகமாக்கி விடும். அந்த வகையான உணவுகளை சாப்பிடக்கூடாது. அந்த வகையில் இந்த பதிவில் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளை பற்றி பார்க்கலாம்.

உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்…

கீரை வகைகள்…

கீரை வகைகள் பொதுவாக நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை கொடுக்கின்றது. கீரைகளை நாம் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும். அதுவே வெயில் காலத்தில் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் வெயில் காலத்தில் கீரைகளை சாப்பிடும் பொழுது நம்முடைய உடலின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். எனவே கீரை வகைகளை வெயில் காலத்தில் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

வேர்கடலை…

வேர்கடலையை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும் வெயில் காலத்தில் வேர்கடலையை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் வேர்கடலை நம்முடைய உடலை வெப்பமாக மாற்றும் தன்மை கொண்டது.

மாம்பழம்…

வெயில் காலம் என்று தொடங்கினாலே மாம்பழத்தின் காலம் என்று கூறலாம். வெயில் காலத்தில் மாம்பழங்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும். இருப்பினும் மாம்பழத்தை நாம் வெயில் காலங்களில் அதிகளவு சாப்பிட்டால் அது நம்முடைய உடல் சூட்டை அதிகரித்து விடும். மேலும் வெயில் காலங்களில் அதிகளவு மாம்பழத்தை சாப்பிடுவதால் முகப்பருக்கள் உண்டாகும்.

இளநீர்…

கோடை காலம் வந்துவிட்டால் இளநீர் விற்பனை அதிகமாகும். இளநீர் நம்முடைய உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடிய பொருட்களில் ஒன்றாகும். இருப்பினும் இளநீரை அதிகளவு நாம் குடித்தால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.

கேரட்…

மிகவும் சத்து அதிகம் உள்ள காய்கறிகளில் ஒன்றாக கேரட் உள்ளது. கேரட் நம்முடைய சருமத்திற்கு மிகவும் ஏற்றது. சருமம் சார்ந்த பிரச்சனைகளை கேரட் சரி செய்யும். இருப்பினும் வெயில் காலத்தில் அதிகளவு கேரட்டை நாம் எடுத்துக் கொண்டால் உடலில் அதிகளவு இரத்த ஓட்டம் நிகழ்ந்து உடல் சூடு அதிகரிக்கும்.

இஞ்சி…

சளி இருமல் என்று வந்து விட்டால் இஞ்சி ஒரு அற்புதமான மருந்துப் பொருளாக பயன்படுகின்றது. இருப்பினும் இஞ்சியை நாம் வெயில் காலத்தில் அதிகளவு எடுத்துக் கொண்டால் உடலில் வறட்சி ஏற்படும்.

முட்டை…

முட்டையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவு இருக்கின்றது. முட்டையை நாம் காலை காலத்தில் அதிகளவு எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் முட்டை நம்முடைய உடலின் சூட்டை அதிகரித்து விடும்.