இந்தப் பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள். ஆனால் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல அச்சமடைந்து வந்தனர்.
அதனால் பேருந்துகளில் செல்வதை தவிர்த்து ரயில்களில் பயணம் செய்ய தொடங்கினார்கள். அதனால் தெற்கு ரயில்வே அனைத்து பகுதிகளுக்கும் வாராந்திர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்தது. மேலும் பண்டிகை தினங்களில் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தாம்பரம் நெல்லை கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
அதனை அடுத்த ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 13 வாரங்கள் தாம்பரம் நெல்லை இடையே கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7:20க்கு நெல்லையிலிருந்து சிறப்பு ரயில் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் தற்போது திருநெல்வேலி தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது