விமான நிலையங்கள் உணவகம் விடுதிகளில் இனி இதற்கான அறை இருக்கக் கூடாது! புகைப்பிடிப்பவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

0
144
Airports, restaurants and hotels should no longer have room for this! Shock news for smokers!
Airports, restaurants and hotels should no longer have room for this! Shock news for smokers!

விமான நிலையங்கள் உணவகம் விடுதிகளில் இனி இதற்கான அறை இருக்கக் கூடாது! புகைப்பிடிப்பவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

நேற்று புகைப்பிடித்தல் இல்லாத தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மேக்ஸ் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரான மருத்துவர் ஹரி சதுர்வேதி கூறுகையில் புகைப்படம் நுரையீரல் செயல்பாட்டை மோசமாக்க  கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். மேலும் உணவகங்கள் கேளிக்கை விடுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் புகை பிடிப்பதற்கான தனி அறைகள் உள்ளது, அதனை அகற்றப்பட வேண்டும்,

அப்போதுதான் சிகரெட் புகையில்லாத சுற்றுச்சூழலை முழுமையாக உருவாக்க முடியும் என கூறியுள்ளார். சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்ட விதிமுறைகளை இந்த தனி அறைகள் பெரும்பாலும் பூர்த்தி  செய்வதில்லை. இரண்டாம் நிலை புகையால் மக்கள் பாதிக்கப்பட இது  முக்கிய காரணமாக உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்பு வர்த்தகம் உற்பத்தி மற்றும் வினியோகம், விளம்பரம் சட்டத்தின் 4வது  பிரிவு பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்கிறது.

இந்நிலையில் உணவகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் புகை பிடிப்பதற்கான தனி அறைகளை மேற்கண்ட சட்டம் அனுமதிக்கிறது இதனால் புகைப்படம் இல்லாதவர்கள் இரண்டு நிலை சிகரெட் புகையை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இது குறித்து சுகாதார ஆர்வலரும் புற்றுநோயிலிருந்து மீண்டவருமான நளினி சத்திய நாராயணன் கூறுகையில் எந்த இடத்திலும் புகை பிடிக்க அனுமதிக்காத வகையில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்,

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சிகரெட் புகையில்லாத சுற்றுச்சூழல் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியனார். இந்தியாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் தற்போதுள்ள புகையிலை கட்டுப்பாடு சட்டம் வலுபடுத்தப்பட   வேண்டும் என்று 88 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 26 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 2 லட்சம் உயிரிழப்புகள் இரண்டாம் நிலை புகையால் ஏற்படுகின்றது.

மேலும் இந்தியாவில் 27 சதவீதம் புற்றுநோய்க்கு புகையிலை பயன்பாடு தான் முக்கிய காரணமாக உள்ளது. அதனால் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் விமான நிலையங்களில் புகைப்பிடிப்பதற்கு இருக்கும் தனி அறையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K