இந்திய ரயில்வே துறையில் சூப்பர் வேலை!! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வருகின்ற நவம்பர் 6 வரை வரவேற்கப்பட இருக்கின்றன.
வேலை வகை: மத்திய அரசு பணி
பணியிடம்: இந்திய முழுவதும்
நிறுவனம்: இந்திய ரயில்வே துறை
பணி மற்றும் காலியிடங்கள்:
குரூப் சி (நிலை-2) – 2
குரூப் D (நிலை-1) – 6
எழுத்தர் மற்றும் தட்டச்சர் பிரிவு – ஒருவர்
கல்வி தகுதி:
குரூப் சி (நிலை-2): இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் +2 படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
குரூப் D (நிலை-1): இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் எழுத்தர் மற்றும் தட்டச்சர் பிரிவில் விண்ணப்பம் செய்ய விருப்பம் விரும்பும் நபர்கள் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனை பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
குழு C (நிலை-2): பணிக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.
குழு D (நிலை-1): பணிக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகப்பட்ச வயது 33 என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
குழு C (நிலை-2) மற்றும் குழு D (நிலை-1) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் wcr. indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 06-11-2023.