உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

0
36
#image_title

உலகக் கோப்பை 2023! வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று பலப்பரீட்சை!!

உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்29) லக்னோவில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் இந்தியா அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடவுள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடர்பு நடப்பு சேம்பியனாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி தனது மோசமான விளையாட்டை பதிவு செய்து வருகின்றது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது.

மேலும் மிகவும் மோசமாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. தன்னுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதன் பிறகு ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி பெற்றது. அங்கு தொடங்கிய இங்கிலாந்து அணியின் தோல்விப் பயணம் அடுத்தடுத்து தென்னாப்பிரிக்கா அணியுடனான போட்டியிலும், இலங்கை அணியுடனான போட்டியிலும் தோல்வி பெற்று மோசமான நிலையில் உள்ளது.

மறுபுறம் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்ற இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே பெறாத அணியாக வலம் வருகின்றது. இதையடுத்து இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று(அக்டோபர் 29) நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும்.

இந்திய அணியில் காயம் காரணமாக சிகிச்சையில் இருக்கும் ஹார்திக் பாண்டியா இந்த போட்டியில் பங்கு பெற மாட்டார். அவருக்கு பதிலாக ரவி அஷ்வின் அல்லது முகமது சிராஜ் விளையாடவுள்ளார். அதே போல இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டன் அவருக்கு பதிலாக ஹேரி ப்ரூக் விளையாட வாய்ப்பு உள்ளது.

எனவே இந்திய அணி 6வது வெற்றியை பெறும் முனைப்பிலும் தோல்விப் பயணத்தில் இருந்து மீண்டு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்கவுள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 29வலு லீக் போட்டி இன்று(அக்டோபர் 29) மதியம் 2 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் எகனா ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது.