உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

0
32
#image_title

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

இந்த பதிவில் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும் மூன்று ஆசனங்கள் என்னென்ன என்பது பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும், அந்த ஆசனங்களின் மற்ற நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மூன்று ஆசனங்கள்…

1. மலாசனம்
2. பாலாசனம்
3. பவனமுக்தாசனம்

மலாசனம் செய்யும் முறை…

முதலில் இரண்டு கால்களுக்கு இடையிலும் இரண்டு அடி இடைவெளி விட்டு நின்று கொள்ள வேண்டும். கால் முட்டிகளை மடித்து உட்காருவது போல இடுப்பை கீழே தாழ்த்த வேண்டும். தொடைகளை விரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தொடைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியானது மேல் உடலை விட அதிக அகலத்தில் இருக்கு வேண்டும். அதன் பின்னர் மேல் உடலை சற்று முன்புறம் கொண்டு வந்து இரண்டு கைகளையும் வணக்கம் சொல்லுமாறு வைக்க வேண்டும். கைகள் தொடைகளுக்கு உள் பக்கமாகவும் பாதங்கள் தரையிலும் இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் உட்கார்ந்து இயல்பான மூச்சை கவனிக்கவும். அதன் பின்னர் இயல்பு நிலைக்கு வர வேண்டும். இதை 3 முதல் 4 முறை செய்ய வேண்டும்.

மலாசனம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்…

* மலாசனம் செய்வதால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடைகின்றது. மேலும் ஆசனவாய் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

* சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மேம்படும்.

* உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அனைத்தையும் வெளியேற்ற உதவி செய்யும்.

* இடுப்பு வலி, மூட்டு வலி, அடிமுதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்

* மூளைச் செல்களுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளிக்கும்.

* மேலும் குடல் இயக்கம் சீராகும்.

பாலாசனம் செய்யும் முறை…

முதலில் தரைவிரிப்பில் மண்டியிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதிகள் தரையில் இருக்குமாறு வைக்க வேண்டும். நம் நெற்றிப் பகுதி தரையில் தொடும் அளவிற்கு குனிய வேண்டும். இரண்டு கால்களின் கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும்படி வைத்த பின்னர் குதிகால்களின் மீது உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் முன்னோக்கி வைத்துக் கொண்டு மூச்சை வெளியிட்டபடி உடலை தொடைகளுக்கு இடையில் கொண்டு வர வேண்டும். பின்னர் மூச்சை நன்றாக சுவாசிக்க வேண்டும். 8 முதல் 10 வினாடிகள் இந்த நிலையில் இருந்து பின்னர் பழைய நிலைக்கு திரும்பலாம். இதை 5 முதல் 7 முறை செய்யலாம்.

பாலாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…

* பாலாசனம் செய்வதால் மலச்சிக்கல், வாயுப்பிரச்சனை சரியாகின்றது.

* இடுப்புப் பகுதியும், முதுப்பகுதியும் வலிமை பெறும்.

* நமக்கு ஏற்படும் தலைவலியையும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

* ரத்த ஓட்டத்தை இந்த ஆசனம் சீராக்குகின்றது.

* முதுகெலும்பு, தொடை எலும்புகள், கழுத்து, தசைகள் ஆகியவற்றை நீட்டித்து தளர்த்துகின்றது.

பவனமுக்தாசனம் செய்யும் முறை…

தரை விழிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு கைகளையும் உடலை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு கால்களையும் மேலே தூக்கி மடித்து வயிற்றுப் பகுதியின் அருகே கொண்டு வர வேண்டும். மடித்த கால்களை வயிற்றில் பதியும்படி வைத்து இரண்டு கைகளாலும் பற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தலையை தூக்கி முழங்கால்களின் மீது தாடை பதியும் படி வைக்க வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 15 விநாடிகள் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முதல் 5 முறை செய்யலாம்.

பவனமுக்தாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…

* இதன் மூலம் ஜீரண உறுப்புகள் சீராக்கப்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யப்படுகின்றது.

* இந்த ஆசனம் செய்வதால் தொடைப்பகுதி, அடிவயிறு, இடுப்புப் பகுதி ஆகியவை வலிமை பெறுகின்றது.

* இந்த ஆசனம் நமது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உள் உறுப்புகளுக்கும் வலிமை சேர்க்கின்றது.

* இந்த ஆசனம் செய்வதால் பெருங்குடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகின்றது.

* முதுகு வலி, கழுத்து வலி பிரச்சனை இருப்பவர்கள் பவனமுக்தாசனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.