பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!!
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் யாரும் நீண்டநேரம் காத்திருக்காமல் கையில் பணம் எதுவும் கொண்டு வராமலே ஆன்லைனிலேயே பத்திரப்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் அனைத்தையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
இந்த டோக்கன்கள் தினமும் 100 முதல் 200 வரையும், பெரிய சார்பதிவாளர் அலுவலகங்களில் 300 முதல் 400 வரையும் டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இதற்கு பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல் பத்திரங்களுடன் வந்தால் பத்திரப் பதிவு வேலை முடிந்து விடும்.
ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் நேரங்களில் கண்டிப்பாக வர வேண்டும். இல்லையென்றால் அந்த டோக்கன்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
எனவே, இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இது குறித்து ஒரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
நாளை ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நாளைய பதிவுக்கான டோக்கன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆடி பதினெட்டு தினத்தை முன்னிட்டு நாளை ஏராளமான ஆவணங்கள் பதிவுக்காக குவியும். இதனால் டோக்கன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.