மெட்ரோ வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! கூடுதல் பெட்டிகளுடன் கூடிய புதிய ரயில்கள்!!

Photo of author

By CineDesk

மெட்ரோ வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! கூடுதல் பெட்டிகளுடன் கூடிய புதிய ரயில்கள்!!

முதன் முதலில் சென்னையில் 2015  ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. தற்போது சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை மற்றும் சென்னை விமான நிலையம்- விம்கோ நகர் இடையில் என இரு வழித்தடங்களில் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இதில் நான்கு பெட்டிகளை கொண்ட மொத்தம் 52  ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று பெட்டிகள் பொதுப் பிரிவினரை சேர்ந்தவருக்கும், ஒரு பெட்டி பெண்களுக்கும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் காலையும், மாலையும் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது. பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

எனவே, இந்த வழித்தடங்களில் கூடுதலாக ரயில்களை இயக்குவதற்கும், மேலும், இந்த கூடுதல் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 6 ஆக கூட்டவும் மெட்ரோ ரயில் முடிவு செய்துள்ளது.

வருகின்ற ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்பதை கருத்தில் கொண்டு மேலும் சில ரயில்களை கொள்முதல் செய்யவும் மெட்ரோ முடிவு செய்துள்ளது.

எனவே, புதிதாக ஆறு பெட்டிகளை கொண்டிருக்ககூடிய 28  ரயில்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கருத்துருவை மெட்ரோ நிறுவனம் தயாரித்து ஒப்புதலுக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதனையடுத்து தமிழக அரசானது புதிய ரயில்களை வாங்குவதற்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூபாய் இரண்டு ஆயிரத்து 820  கோடியை கடனாக வாங்கி உள்ளது.

மேலும் மெட்ரோ தயாரித்த இந்த கருத்துருவை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவதற்காக மத்திய அரசின் உதவியோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.