ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!!
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தினமும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆகும்.
ரேஷனில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், முதலிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் அரிசிகளை கடத்தும் குற்றம் அதிகரித்து வருகிறது.
அரசி கடத்திய குற்றங்கள் சில நாட்களுக்கு முன்பு கூட தேனி மாவட்டம் மற்றும் கேரளா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. இவர்கள் இதை கடத்தி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மக்களுக்கு தேவையான அரிசி சரியாக கிடைக்காமல் போவதாக ஏராளாமான புகார்கள் எழுந்து வருகிறது. மேலும், மக்கள் வாங்காத பொருட்களையும் வாங்கியதாக ரேஷன் கடைக்காரர்கள் பதிவு செய்து விடுகிறார்கள்.
இது குறித்து அனைத்து ரேஷனிலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை புதிய உத்தரவை அறிவித்தது. எனவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊழியர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரிசி போன்ற பொருட்களை ஊழியர்கள் கடத்துவது தெரிந்தால் மக்கள் 1800 599 5950 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் கொடுக்கலாம். இதனைத் தொடர்ந்து தற்போது ரேஷனில் மற்றொரு புகார் தொடங்கி உள்ளது.
அதாவது, மக்களுக்கு ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வழங்காமல் ஒவ்வொரு நாளும் வழங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதைத் தடுக்க டிஎன்இபிடிஎஸ் என்ற மொபைல் செயலியை உணவு வழங்கல் துறை கொண்டு வந்துள்ளது.
இந்த செயலியின் மூலமாக உணவு பொருட்களின் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
எனவே, அனைவரும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து ரேஷன் பரிவர்த்தனைகள் குறித்து உடனடியாக தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுவரை இந்த செயலியை வெறும் 6.67 லட்சம் மட்டுமே பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.