பாபர் ஆசம்மை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்… புது தரவரிசையில் எத்தனையாவது இடம் தெரியுமா?

0
132

பாபர் ஆசம்மை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்… புது தரவரிசையில் எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார்.

இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், அவர் ஏபி டி வில்லியர்ஸ் செய்ததைப் போல ஷாட்களை ஆடி வருகிறார்” என்று கூறி பாராட்டி இருந்தார். ஆனால் வேறு சில முன்னாள்  வீரர்கள் டிவில்லியர்ஸுடன் அவரை ஒப்பிடும் அள்வுக்கு இன்னும் அவர் சாதனைகள் படைக்கவில்லை என்று கூறி இருந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்கு இடம்பிடித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 46 ரன்கள் சேர்த்த அவர் இப்போது ஒரு இடம் முன்னேறி 3 ஆவது இடத்துக்கு வந்துள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த பாபர் ஆசம் 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் முகமது ரிஸ்வானும், இரண்டாவது இடத்தில் எய்டன் மாக்கரமும் உள்ளனர். இந்திய அணியில் முதல் 10 இடங்களுக்குள் வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையைப் படைத்த ஒரே அணி இந்தியாதான்!
Next articleகபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள்