2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? – ஒரு அலசல்!….

eps

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அதிமுகவா? அல்லது திமுகவா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மறைவு, சசிகலா, கூவத்தூர் அவலங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்கப் மரணம் என்று ஏறக்குறைய அதிமுக அதன் அழிவு அத்தியாயத்தின் இறுதி பக்கங்களை எழுத்துக்கொண்டிருந்த நேரம். திமுக ஆட்சியமைக்கும் என்பது … Read more

பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

jayakumar

போன அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தினமும் காலை செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக அதிமுகவின் நிலைப்பாட்டு பேசி வந்தவர். குறிப்பாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு இவர்தான் பதில் சொல்லி வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்தது. வழக்கமாக வட சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெயக்குமாரும் தோல்வி அடைந்தார். அதன்பின் சில மாதங்களில் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை … Read more

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

sengottaiyan

Sengottaiyan: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நடைபெற துவங்கியிருக்கிறது பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்க்க துவங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். சட்டபையில் கூட தனியாக செயல்பட துவங்கினார். பழனிச்சாமி ஏற்பாடு செய்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னை ஏன் கேட்கிறீர்கள்?.. செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்’ என கோபப்பட்டார் பழனிச்சாமி. டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசிய பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் … Read more

4 சுவற்றுக்குள் அரசியல்!. 2 வருஷம் ஓடிப்போச்சி!.. விஜயை கலாய்க்கும் கே.பி.முனுசாமி!…

vijay(

Vijay Tvk: நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜயாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

விஜய்க்கு தில்லு இருந்தா இத பத்தி பேசட்டும்!.. தவெகவை பொளந்த புளூசட்ட மாறன்!…

bluesatta

சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. பழனிச்சாமியுடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தார்கள். எனவே, அதிமுகவுடன் பாஜக கூட்டணை அமைக்கிறது என பலரும் பேசினார்கள். ஆனால் ‘மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்தார். ஆனால், கூட்டணி பற்றி பேசப்படவில்லை … Read more

நான் அமித்ஷாவை மீட் பண்ணதால உதயநிதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது!. பழனிச்சாமி நக்கல்!…

eps

2 வருடங்களுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக. ஆனால், இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் … Read more

எடப்பாடி இப்படி பேசினா எப்பவுமே ஜெயிக்க முடியாது!. நக்கலடித்த ஓபிஎஸ்…

ops

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதுதான் எடப்பாடி பழனிச்சாமி செய்த விஷயங்களில் ஹைலைட். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து … Read more

கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!…

stalin

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளில் மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களோ இல்லையோ தங்களின் சுய தம்மட்டம் மற்றும் தற்பெருமைகளை அதிகம் பேசுவது அதிகரித்துவிட்டது. அதிலும் சிலர் பன்ச் வசனங்களையெல்லாம் சொல்லி மற்ற எம்.எல்.ஏக்களை சிரிக்க வைப்பார்கள். கலைஞர் கருணாநிதி இருந்தவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரின் கேள்விகளில் அனல் பறக்கும். எனவே கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் அமர்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என எம்.ஜி.ஆரே ஆசைப்படுவார். … Read more

வேலுமணி கைவசமுள்ள பக்கா திட்டம்: 2026 தேர்தலுக்கு சூப்பர் ஸ்கெட்ச் – அதிமுகவினருக்கு வார்னிங்!

வேலுமணி கைவசமுள்ள பக்கா திட்டம்: 2026 தேர்தலுக்கு சூப்பர் ஸ்கெட்ச் - அதிமுகவினருக்கு வார்னிங்!

அ.தி.மு.க. சார்பில் கோவை மாநகர், வடக்கு மற்றும் புறநகர் தெற்கு மாவட்டங்களின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார். அவர் கூறியதாவது: “அடுத்த சட்டசபை தேர்தலுக்கு வெறும் சில மாதங்களே உள்ளன. எனவே, ஒவ்வொரு வாக்காளரின் பெயர் சரியாக வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது, தி.மு.க. அரசு, அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அ.தி.மு.க.வின் ஓட்டுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது … Read more

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. கூட்டல்-கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “எங்கள் கணக்குகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். நிருபர்களை சந்தித்தபோது, அவர் தி.மு.க. அரசின் நிதி மேலாண்மையை கடுமையாக விமர்சித்தார். “நான்கு ஆண்டுகளில் உங்கள் அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. ஆனால் … Read more