ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!
தமிழகம் முழுவதும் 1,331 விடுதிகளில் 65,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது, மேலும், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பதாக கூறுகின்றனர். ஆனால், உண்மையில் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் அதை உணவருந்துவதில்லை. … Read more