ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கு பயன்படுத்தவும்,ஊதியத்தை அதிகரித்து வழங்கவும் ஏதுவாக அதை உள்ளூர் மயமாக்குங்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழவுக்கும் நீட்டிப்பு, அதிக ஊதியம்: ஊரக வேலைத் திட்டத்தை உள்ளூர் மயமாக்குங்கள்! மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் … Read more

நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss

நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்   தமிழ் நாடு நாள் கொண்டாடுவது குறித்து திமுக தரப்புக்கும், அதன் எதிர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியை தான் தமிழ் நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   இது குறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதுவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.   மொழிவாரி … Read more

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் 

Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் திட்டமிட்டே கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை விதிகளை மீறி பறிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றும் உதவி கணக்கு அலுவலர்களுக்கு திட்டமிட்டு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேவையின்றி … Read more

32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை! விடியலை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை 32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில் கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் ஊதிய பாகுபாட்டை களைவதற்கான ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இரட்டை ஊதிய முறை அநீதி: … Read more

பாமக இளைஞர் அணி தலைவர் நியமனத்தால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடா?

Dr Ramadoss and Anbumani Ramadoss

பாமக இளைஞர் அணி தலைவர் நியமனத்தால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடா? ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கியிருப்பது பாமகவினர் மத்தியில் ஒரு பிரிவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் அதிமுக அல்லது திமுக என மாறி மாறி எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களுடைய செயல்பாடுகள், அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் பாமக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 5 சதவீத … Read more

ஒரு கார் மீது மற்றொரு கார் மோதல்!! விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணி மனைவி!

A car collides with another car!! Bama leader Anbumani's wife who was involved in an accident!

ஒரு கார் மீது மற்றொரு கார் மோதல்!! விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணி மனைவி! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அவர்கள் நேற்று காலை சென்னையில் இருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு செல்ல புறப்பட்டார். அப்பொழுது திண்டிவனம் டு சென்னை செல்லும் வழியில் பாதிரி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில்,கார் ஒன்று அங்கிருந்த டீ கடையிலிருந்து திடீரென சாலையில் திரும்பியது. இதனை பார்க்காத சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி ஓட்டி வந்த … Read more

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியது,மதுவிலக்கு அமல் படுத்தும் படி முதன் முதலில் பாமக தான் வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் தான் இதர கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி உள்ளனர். அதேபோல சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 33 சதவீதம் டாஸ்மாக் மூலமே வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு … Read more

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்   மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை! என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.   மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட … Read more

தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள் 

Anbumani Ramadoss

தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள் சென்னையில் விரைவுபடுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு பாமக தலைவைர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் … Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் … Read more