பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் இங்கு பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளரோ அல்லது தலைவரோ யாரும் இல்லை என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் பேசியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி கே … Read more

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு! இரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு இனிமேல் அதாவது இன்று(ஏப்ரல்1) முதல் பணம் செலுத்த தேவையில்லை என்று இரயில்வே துறை மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதாவது ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் யூபிஐ(UPI) என்ற ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் … Read more

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்! அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி திரட்டியது என்ற விவரத்தை வழங்க எஸ்.பி. ஐ வங்கியிக்கு உத்தரவிட்டது. எஸ். பி.ஐவங்கி விவரங்களை அளிப்பதற்க்கு கால அவகாசம் கேட்டு மேல்முறையீட்டு மனு அளித்த நிலையில் அதனை … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு! நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தும் முறையை அமல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்ச்சித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழுவை மத்திய அரசு … Read more

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்! கடந்த மாதம் ஆளும் திமுக அரசால் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையானவை ஏற்கனவே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகவே இருந்தது. இதனை பற்றி பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர், ஆனால் திமுகவோ மாநில அரசின் திட்டங்களைதான் மத்திய அரசு காஃபி அடிக்கிறது என ஒப்பேற்றி வருகின்றனர். மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் … Read more

பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இனி நீங்களே ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம்!

பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இனி நீங்களே ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம்! இந்திய குடிமகன்கள் ஒவ்வொருக்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமான ஒன்று. ஆதார் அடிப்படையில் தான் மத்திய மற்றும் மாநில அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது. ஆதார் அட்டையில் ஆதார் எண், பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கியமாக திகழ்ந்து வரும் … Read more

இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா!

இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா! நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக பேச்சு வார்த்தை நடத்தி இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில் தேர்தலில் களமிறங்கும் அனைத்து … Read more

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்! எதிர் வரும் 2029ம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை குறைக்கவும் மேலும் பிரதிநிதிகள் செய்யும் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செய்ல்படுத்த இருப்பதாக … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையை சார்ந்த சாந்தனனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பிறகு ஆயுல் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு நல் ஒழுக்கம் காரணமாக விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் இலங்கையை சார்ந்தவர் என்பதால் மீண்டும் இலங்கைக்கு … Read more