இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

0
149
#image_title

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது.

ஆனால் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி திரட்டியது என்ற விவரத்தை வழங்க எஸ்.பி. ஐ வங்கியிக்கு உத்தரவிட்டது.

எஸ். பி.ஐவங்கி விவரங்களை அளிப்பதற்க்கு கால அவகாசம் கேட்டு மேல்முறையீட்டு மனு அளித்த நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது, அந்த விவரத்தை நேற்று மாலை தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது.

அந்த விவரத்தில் கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒரு இலட்சம் பத்து இலட்சம் ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரத்தை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கிய நிறுவனங்கள் மற்றும் நன்கொடையை பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அந்த தேர்தல் பத்திரங்களை வங்கிகளில் செலுத்தி அதனை பணமாக பெற்ற பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, ஓய.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி கட்சி, பாரத் ராஷ்ட்ரிய சமாதி, மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மா கட்சி உள்ளிட்ட கட்சிகள்கள் தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதி பெற்றுள்ளன.

பாரதி ஏர்டெல், முத்தூர், பஜாஜ் வேதாந்தா, நவயுகா, பிஎம்எல், பிரமல், பிவிஆர், சம்பாமா, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடை வழங்குவதில் கோவையை சார்ந்த பியூசர் கேமிங் என்ற லாட்டரி நிறுவனம் 1368 கோடி வழங்கி முதலிடத்தில் உள்ளது, மேகா இன்ஜினியரிங் நிறுவனம் 968 கோடியும், வேதாந்தா 400 கோடியும், கியூக் சம்ளை சைன் நிறுவனம் 410 கோடி உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்களும், பாகிஸ்தானின் மின் உற்பத்தி நிறுவனமான ஹப் பவர் நிறுவனமும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆனால் இன்னும் யார் யார் எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

author avatar
Savitha