போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்?

The DMK president who was elected for the second term uncontested! Are these the general secretary and treasurer?

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்? சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளா், பொருளாளா் , தி.மு.க. தலைவா் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கபட இருந்தது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என முன்னதாகவே தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. … Read more

பெண்களை ஓசியில் பயணிக்கிறார்கள் என்று சொல்வதா? அப்போ நீங்க எப்படி பயணிக்கிறீங்க? பொன்முடி மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்!

சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் தொடர்பாக இழிவாக பேசிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் இப்போது மட்டுமல்ல ஆற்றில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவ்வப்போது இது … Read more

திமுகவில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்! புதிய மாற்றங்களை அறிவித்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன்!

திமுகவில் நிர்வாக வசதிக்கு ஏற்றவாறு மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக மாநில நீர்வளத் துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் திமுக நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் சரியாக நடைபெறுவதற்காக மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். அதனடிப்படையில், மதுரை தெற்கு மாவட்டம், தர்மபுரி கிழக்கு மாவட்டம், தர்மபுரி மேற்கு மாவட்டம், விழுப்புரம் மத்திய மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் … Read more

அதிமுகவை கிண்டல் செய்த முக்கிய அமைச்சர்!

செம்பரம்பாக்கம் ஏரியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்றைய தினம் ஆய்வு செய்தார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் ,மாவட்டங்களில் கனமழையின் காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரின் அளவு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 22 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் நேற்று காலையில் நிலவரத்தின் அடிப்படையில் 21.33 அடியாக … Read more

தடுப்பூசியை போட்டால் போடு போடாவிட்டால் போ! துரைமுருகன் நக்கல் பேச்சு!

தற்சமயம் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது, இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நோய்த்தொற்று தடுப்பூசி 2 தவணை களையும் போட்டுக்கொள்ளுங்கள். போடாவிட்டால் போ தான் என தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

திமுக ஒரு துரோக கும்பல்! துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுகவின் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் எம்ஜிஆர் மற்றும் வைகோ உள்ளிட்டோரை துரோகிகள் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதனை கண்டிக்கும் விதத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தங்களுடைய இயக்கம் பல துரோகிகளை கடந்து வெற்றி பெற்றது என தெரிவித்திருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், மதிமுகவின் பொதுச் … Read more

அடித்தால் கூட வாங்கிக் கொள்வோம் ஆனால் துரோகம் செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

தற்போதைய தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன், அவர் திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார், அவர் பல சமயங்களில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நகைச்சுவையாக பேசுவது வழக்கம் அதோடு எதுகை மோனையுடன் பேசுவார் இதனால் இவருடைய பேச்சை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கவே செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றும்போது, … Read more

இந்த செயல் கனிம வளங்களை திருடுதல் ஆகாது! சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் அரசு மணல் குவாரிகள் ஆங்காங்கு செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த அரசு மணல் குவாரி தமிழகம் முழுவதும் விபத்துகள் அதிகமாக நடப்பதாலும் கனரக வாகனங்கள் செல்வதால் கிராமச் சாலைகள் குண்டும் குழியுமாக ஆவதோடு, மணல் எடுப்பதால் தமிழகம் முழுவதும் வரட்சி நிலவிய காரணத்தாலும் இந்த அரசு மணல் குவாரிகளுக்கு தமிழக மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆகவே மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தெரிவித்து அப்போது தமிழகம் முழுவதும் … Read more

கனிம வளங்களை திருடினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

கனிம வளங்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதி அளித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் பொது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் மற்றும் கனிமவளத்துறை மீதான விவாதம் நடந்தது.அந்த விவாதத்தின் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பிரின்ஸ் கன்னியாகுமரியில் மலைப்பகுதி கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. … Read more

சட்டசபையில் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் சென்ற ஒரு வார காலமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்றைய தினம் வேளாண்மை கால்நடை மீன்வளம் மற்றும் பால் வளத் துறையில் பராமரிப்பு மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் திருவாடானை தகுதி சட்டசபை உறுப்பினர் கரு மாணிக்கம் ஆர்எஸ் மங்கலம் ஏரிகளில் … Read more