தடுப்பூசியை போட்டால் போடு போடாவிட்டால் போ! துரைமுருகன் நக்கல் பேச்சு!

0
259

தற்சமயம் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது, இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நோய்த்தொற்று தடுப்பூசி 2 தவணை களையும் போட்டுக்கொள்ளுங்கள். போடாவிட்டால் போ தான் என தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

காட்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் துரைமுருகன் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதாவது, நான் சொல்லாவிட்டால் கூட நீங்கள் அனைவரும் வாக்களித்து விடுவீர்கள் ஆனால் துரைமுருகன் வந்து ஓட்டு கேட்கவில்லையே என்று யாரும் சொல்லிவிடக் கூடாது அல்லவா? அதற்காகத்தான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன் என கூறியிருக்கிறார். கிணறு, ஆழ்துளை கிணறு, அமைக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். பேருந்துகளில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என்று யாராவது பெண்களைப் பற்றி தவறாக பேசினால் அவர்களை வேலையை விட்டு தூக்கி விடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் நோய்த்தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது .ஆகவே எல்லோரும் 2 தவணைத் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும், அப்படி போட்டுக் கொள்ளா விட்டால் போ என துரைமுருகன் உரையாற்றியிருக்கிறார்.

Previous articleஉள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்! மறைமுகமாக எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய ஓபிஎஸ்!
Next articleஇந்த ஏழு மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க காத்திருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here