முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு வெகு நாட்களாக இதயம் சம்பந்தமான பிரச்சனை இருந்ததாக கூறுகின்றனர். இது குறித்த சிகிச்சைக்காக தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு அவருக்கு விரிவான சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பை மருத்துவமனையானது இன்று காலை 9 மணி அளவில் வெளியிடும் என தெரிவித்துள்ளது.

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!! தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் … Read more

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு! சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து , அலுவலகத்தினுள் நுழைந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்கள் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் சிபிசிஐடி காவலர்கள் மூலம் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டன . … Read more