ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணம்…! கிருஷ்ணகிரியில் சோகம்!

கிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 58). இவர் அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது தந்தை ராமு செட்டியார் (வயது 88), தாயார் சீதாலட்சுமி (வயது 80) … Read more

தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் !!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை ,சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பனந்தோப்பு பகுதிக்கு அருகே உள்ள மங்கலம்மபுரத்தை சேர்ந்த மேச்சேரி மற்றும் இவரது மனைவி பச்சையம்மாள்(22) கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் உறவினரின் மகனான 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சென்று பச்சையம்மாளிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு, பச்சையம்மாள் தீப்பெட்டி இல்லை என்று கூறி அங்கிருந்த சிறுவனே வீட்டை விட்டு … Read more

புதிதாக கண்டெடுக்கப்பட்ட 600 ஆண்டு பழமையான சாமி சிலைகள் !!

கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் நூற்றாண்டு முற்பட்ட சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் அருகே 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை அருகில் இருந்த அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே எண்ணேகொள்புதூர் ஏகநாதன் உள்ளிட்டோர் தென்பெண்ணையாற்றில் கற்சிலைகளை இருப்பதனைக் கண்டு அவற்றை கரையில் எடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து வரலாற்றுப் பேராசிரியர் விஸ்வபாரதி அவர்களின் தகவலின் பெயரில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் காப்பாட்சியர் கோவிந்தராஜ் செல்வராஜ் செல்வகுமார் மற்றும் வரலாற்று ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயண … Read more

21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! BE பட்டதாரி பெண் ஒருவர் ஃபேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பூமிகா என்பவர்.இவர் ஒரு BE பட்டதாரி.பூமிகா அவருடைய தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார்.அதே குடியிருப்பை சேர்ந்த பக்கத்து வீட்டுக்கார்ரான பார்த்திபன் ஷர்மிளா தம்பதியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 2-ம் தேதியன்று … Read more

கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! ஊத்தங்கரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கோடால வலசை கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகள் ராதிகா. அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ஆனந்தி. இருவருக்கும் 13 வயதே நிரம்பிய நிலையில் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால் அருகிலுள்ள கிணற்றுக்குச் … Read more