ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை- திமுக வின் முடிவு என்ன?

நேற்று காலையில் திருச்சி மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தனர். கைதிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வியிட்டனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது, ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளையொட்டி நன்னடத்தை காரணமாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், இந்த வருடத்தில் விடுதலை செய்யப்படும் கைதிகள் பற்றி இரண்டு வாரத்தில் முடிவு செய்யப்படும். இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் தான் சிறைச்சாலை உள்ளே ஐ.டி.ஐ. … Read more

வாடகை கட்டிடத்தில் தொடங்கவிருக்கும் மதுரை எய்ம்ஸ்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக மத்திய அரசு பல வருடங்களாக கூறி வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுப் பணி கூட நடந்தது. டெல்லி எய்ம்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய புகழ்பெற்ற மருத்துவமனை ஆகும். டெல்லி எய்ம்ஸ் போலவே தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்ட எல்லா பணிகளும் ஆயத்தமாயின. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் பற்றி எந்த தகவலும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் … Read more

ஐபில் கோப்பை வென்ற சென்னை அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து.!!

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 … Read more

விஜயதசமி அன்று திறக்கப்படுகிறதா தமிழக கோவில்கள் ?

Representative purpose only

உலகெங்கும் கொரோனா தொற்று நோய் காரணத்தால் மக்கள் வீடுகளில் முடங்கிப் போனார்கள். பிள்ளைகளுக்கு இணைய வழிக் கல்வி, அலுவலக பணிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்வது போன்ற மாற்றத்தினால் கடந்த ஒன்றரை வருடமாக உலகம் நான்கு அறை சுவற்றினுள் முடங்கிப் போனது. ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்களுக்கும் என்றாகி போனது. வரலாறு காணாத நிகழ்வாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்றின் மீதான விழிப்புணர்வும், தடுப்பூசியின் பயன்பாடும் அதிகரித்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் … Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர் உள்துறை மீதான மானிய விவாதம்! ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே காரசார பேச்சு!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.இதனால் அந்தக் கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அவருடைய மகிழ்ச்சி முடிவதற்குள் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே திமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சி பரவியது. … Read more

குழந்தையை வைத்துக் கொண்டு பரிதவித்த பெற்றோர்! உடனடியாக உதவி புரிந்த முதலமைச்சர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதாவது திமுக தனித்து 125 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது.இவ்வளவு பெரிய வெற்றியை திமுக பெற்றதற்கு காரணம் அதிமுகவுக்கு பொதுமக்களிடையே இருந்த அதிருப்திதான் என்று சொல்லப்பட்டாலும் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட வாக்கு சதவீதத்தை பார்த்தால் மிகவும் குறைவாக தான் இருக்கிறது.அப்படிப் பார்த்தோமானால் திமுக ஸ்டாலின் அவர்களின் அதிர்ஷ்டத்தால் தான் வெற்றி பெற்று இருக்கிறது … Read more

சட்டசபையில் முதலமைச்சரின் செயலால் திகைத்துப்போன அதிமுக எம்எல்ஏக்கள்!

தற்சமயம் நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்ய வேண்டாம் என்று சட்டப்பேரவையில் ஒரு உத்தரவை போட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை நடந்தது. இதில் இரண்டு துறை அமைச்சர்களான கே என் நேரு மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டோர் உரையாற்றி எதிர்க்கட்சியை சார்ந்தவர்களின் கேள்விகளுக்கு பதில் … Read more

நகை கடன் தள்ளுபடி விவகாரம்! அந்தர் பல்டி அடிக்கும் ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் நகை கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கி நகை கடன் வாங்கியவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் முறையில் நகை கடன் வாங்கியவர்களுக்கு அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்து 100 தினங்களை கடந்து விட்ட நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதன் … Read more

நீட் தேர்வு! வருகிறது புதிய சட்ட முன்வடிவு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதனடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான சூழல் தொடர்பாக ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு பெற்றுக்கொண்டது. இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி … Read more

அரசு விழாவாக கொண்டாடப்படும் இருக்கும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இன்றைய தினம் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும் வாழும் வரலாறாகவும் இந்த கோவில் விளங்கி வருகிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக புராதான … Read more