லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிலை – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிலை - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

லஷ்மி விலாஸ் வங்கி, கரூர் மாவட்டத்திலுள்ள அலுவலகத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்குகிறது. இந்த வங்கி 1926 ஆம் ஆண்டு இராமலிங்க செட்டியார் என்பவரின் தலைமையில் 7 வர்த்தகர்களுடன் இணைந்து தொடங்கியது ஆகும். இந்த வங்கி படிப்படியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. அதாவது, 94 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது தான் லஷ்மி விலாஸ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல், இந்த வங்கி தொடர்ந்து … Read more

ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் காசோலை பரிவர்த்தனை செய்பவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் :! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு !!

ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் காசோலை பரிவர்த்தனை செய்பவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் :! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு !!

காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் இன்னல்களை தடுக்கும் வகையில், “காசோலை துண்டிப்பு முறை” என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் சிக்கல்களும், பிரச்சினைகளும், தகவல் பரிமாற்றம் தாமதமாகும் போன்ற இன்னல்களினால் பணத்தை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், 50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும் போது, இதுதொடர்பாக தங்களது வங்கிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று … Read more

மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு..!!

மக்களுக்கு ஓர் நற்செய்தி! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு..!!

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90% பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், நாட்டின் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிற்பகலில் நிறைவடைந்த … Read more

கடனை திரும்பச் செலுத்த ரிசர்வ் வங்கி மக்களுக்கு வைத்த கெடு?

கடனை திரும்பச் செலுத்த ரிசர்வ் வங்கி மக்களுக்கு வைத்த கெடு?

கடன்களை திருப்பிச் செலுத்த ஆர்பிஐ கொடுத்த காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் முடிவடைய உள்ள நிலையில் ,அதனை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கூடாது என எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மார்ச் மாதத்தில், ரிசர்வ் வங்கி மார்ச் 1 முதல் மே 31 வரை அனைத்து கால கடன்களையும் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசத்தை அனுமதித்தது.பின்பு மே 22 அன்று, இதை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.

சிஐஐ ஏற்பாடு செய்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கழுக்கான ஒரு கூட்டத்தின் போது, ​​திருப்பிச் செலுத்தக்கூடிய பல நிறுவனங்கள் கால திட்டிப்பு திட்டத்தின் மூலம் தேவையற்ற பயனைப் பெறுவதால் வங்கிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.இதனால் தயவுசெய்து தடையை நீட்டிக்க வேண்டாம் என்றார். இதனால் பணம் செலுத்தும் திறன் கொண்ட நபர் கூட இந்த திட்டத்தால் அவர்களுக்கு சதகமாக அமைவதாக அவர் குற்றச்சட்டை முன்வைத்தார்.

மூன்று மாதங்களுக்கு மற்றொரு நீட்டிப்பு இருக்கும் என்று சில பேச்சுக்கள் உள்ளதால், இதனை செய்ய வேண்டாம் என்று கூறினார். மேலும் இதனால் சிறிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த கருத்துக்கு வங்கி ஆளுநர் தீபக் பரேக் எந்த பதிலும் தற்போது அளிக்க இயலாது என்று கூறி பேச்சை முடித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வர்த்தகம் வழக்கம் போல் இல்லாததாலும், கொரோனா தொற்றுநோயால் வருமானம் போக்குவரத்து சீர்குலைந்து தவித்து வருவதாலும், இந்த நீட்டிப்பினை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கைகள் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

Read more