உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலவரம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள் கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.