காயத்தில் இருந்து மீண்ட முர்ரே

காயத்தில் இருந்து மீண்ட முர்ரே

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 31-ந்தேதி நியூயார்க் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்று இன்றி இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, பெல்ஜியம் வீராங்கனை கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது.  நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்பதற்கு வசதியாக முன்னாள் சாம்பியன்கள் முர்ரே நீண்டநாள் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். மூன்று குழந்தைகளின் தாயாரான 37 வயதான கிலிஸ்டர்ஸ் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு இந்த … Read more

வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் – கே.எல். ராகுல்

வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் - கே.எல். ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.  இந்தி நடிகையும், மாடல் அழகியுமான செர்பியா நாட்டை சேர்ந்த நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை 30ந்தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பல வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஹர்திக்கின் சகவீரரான கே.எல். ராகுல், ‘வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என அவனிடம் கூறுங்கள்’  என பதிவிட்டிருந்தார்.

நான் ஒன்றும் ரோபோ கிடையாது

நான் ஒன்றும் ரோபோ கிடையாது

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் திடீர் பவுன்சராகவும், அதிவேகமாகவும் பந்து வீசக்கூடியவர். ஆனால் மான்செஸ்டரில் அவரின் தீப்பொறி பந்து வீச்சை காண இயலவில்லை. 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நாங்கள் நினைத்த மாதிரி ஆட்டம் சென்றதாக நினைக்கவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது. ஒவ்வொரு நாளும் மணிக்க 90 மைல் வேகத்தில் பந்து வீச … Read more

பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (156), பாபர் அசாம் (69), சதாப் கான் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்து அல்-அவுட் ஆனது. இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து  4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. யாசீர் ஷா பட்லர் (38), கிறிஸ் வோக்ஸ் (19), பெஸ் (1) ஆகியோரை … Read more

இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு போட்டியும் கடந்த மூன்று மாதமாக நடைபெறவில்லை. இதனால் ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் தள்ளிபோனது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.  அங்கு கொரோனா அதிகரித்து வருவதால் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் … Read more

கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை குறைப்பு

கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை குறைப்பு

அமெரிக்காவில் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி மொத்த பரிசுத்தொகை ரூ.400 கோடியாகும். இது 2019-ம் ஆண்டை விட ரூ.28 கோடி குறைவாகும். அதே சமயம் முதல் சுற்றில் வெற்றி பெறுவோருக்கு மட்டும் 5 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு ரூ.45 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. … Read more

ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும்

ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும்

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரங்கேறும் இந்த போட்டித் தொடர் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க இருக்கிறது. … Read more

இங்கிலாந்து அணி தடுமாற்றம்

இங்கிலாந்து அணி தடுமாற்றம்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்தது தொடக்கத்தில் தடுமாறினாலும் பாபர் அசாம் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அதன் பின்னர் ஆன்டேர்சன் பந்தில் அவுட் ஆனார். அபாரமாக ஆடிய ஷான் மசூத் 156 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், … Read more

கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை

கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணாமாக போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில்  இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தற்போது துபாயில் நடக்கும் என உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா பேசும்போது நான் எப்பொழுதும் கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை அணியில் உள்ள மற்ற வீரர்களின் செயல்பாடுகளே முக்கியம். மேலும் இவ்வளவு காலம் விளையாடாமல் முடங்கி இருப்பது இது தான் முதல்முறையாகும். இந்தியாவை விட வெயிலின் தாக்கம் அங்கு அதிகமாகவே இருக்கும் என்பதை நான் உணர்வேன். ஆனால் போதுமான காலஅவகாசம் இருப்பதால் … Read more

ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ

ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ

உலகம் முழுவதும் கொரோனவால் பல்வேறு துறைகள் பாதிக்கபட்டுள்ளன அந்த வகையில் அனைத்து விதமான போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடைபெறவில்லை. தற்போது இங்கலாந்தில் மட்டுமே ரசிகர்களின்றி போட்டி நடைபெறுகிறது. கடந்த மே மாதமே இந்தியாவில்  நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி கொரோனவால் ஒத்திவைக்கபட்ட நிலையில் தற்போது துபாயில் போட்டி நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த போட்டியின் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்திய – சீனா எல்லை பிரச்சனையால் … Read more