ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி
சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாடா குழுமத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றுவது பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இது இரண்டு வார கால இடைவெளியில் நடந்த இரண்டாம் நிலை உயர்மட்ட பேச்சு என்று கூறப்படுகிறது. … Read more