தேனியில் மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் பலி !!

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வந்ததில், மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிவுள்ளது.

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதுவரும் 20-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக்க இருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தேனி, சேலம், மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இரவு முழுவதும் பெய்து வந்துள்ளது .இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தோட்டக்கலையில் ஈடுபட்டிருந்த மூன்று நபரை மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவருடைய உடல் நலமும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் ,மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை! 

மகள் உயிரோடு இருக்கும்பொழுதே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி ஓட்டிய தந்தை! மகள் காதல் திருமணம் செய்து கொண்டதனால் தாங்க முடியாத தந்தை, மகள் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மற்றும் செல்வி.குடும்பத்துடன் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் அவர் பெயர் … Read more

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு! ஆன்லைனில் எடுக்கும் வகுப்புகள் புரியாததால் குழம்பிய மாணவனை பெற்றோர் திட்டியதால் தூக்குப் போட்டுக் கொண்ட சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அடுத்த கரட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் விக்ரபாண்டி. விக்ரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் ஆக … Read more

சுருளி அருவியில் குறையும் நீர் வரத்து! காரணம் என்ன?

Suruli Falls

சுருளி அருவி தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலம். ஆன்மீக தலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுருளி அருவி. 40 அடி உயரம் உள்ள இந்த அருவியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான நாட்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம். மேலும் இங்குள்ள சுருளியாண்டவர் கோயில் புகழ்பெற்றது. இதிகாசமான சிலப்பதிகாரத்தில் இவ்வருவியின் புகழ் … Read more