தேனியில் மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் பலி !!

0
130

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வந்ததில், மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிவுள்ளது.

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதுவரும் 20-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக்க இருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தேனி, சேலம், மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இரவு முழுவதும் பெய்து வந்துள்ளது .இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தோட்டக்கலையில் ஈடுபட்டிருந்த மூன்று நபரை மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவருடைய உடல் நலமும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் ,மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவேற லெவலில் டி.ஆர்.பியை அதிகரிக்க வைத்த பிரபல சேனல்
Next articleஇந்தியாவிலும் தமிழகத்திலும் முதலிடத்தில் உள்ள  ஹேஷ்டேக்!