தூதரகத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்

சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக ஊழியர்கள், வளாகத்தைவிட்டு வெளியேற மும்முரமாய்த் தயாராகி வருகின்றனர். சீன நேரப்படி இன்று காலை 10 மணிக்கெல்லாம் அதிகாரிகள் வளாகத்தைக் காலி செய்தாகவேண்டும். காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் பெரிய வாகனங்கள் துணைத் தூதரகத்திற்குள் சென்று வந்த வண்ணம் உள்ளன. டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனா அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ,இடையிலான உறவில் … Read more

முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா

அமெரிக்கா, கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக செய்த அதன் முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டும் Moderna நிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கம் சுமார் ஒரு பில்லியன் டாலர் வரை வழங்குகிறது. இறுதிகட்ட பரிசோதனைகளைத் தொடங்கவிருக்கும் Moderna நிறுவனத்துக்கு இதற்குமுன் 483 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் மேல் 472 மில்லியன் டாலரை வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்தவிருக்கும் Moderna நிறுவனம், … Read more

அமெரிக்காவை தாக்கிய புயல்

ஹன்னா என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவில் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. புயலை தொடர்ந்து டெக்சாசின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கன … Read more

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு ஆயுள் தண்டனையுடன் 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக் மெக்கென்னி  என்னும் 17 வயது மாணவர் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி டென்வர் வட்டாரப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சம்பவத்தில் 18 வயது மாணவர் இறந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் மெக்கென்னி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாம் செய்த குற்றத்திற்கு மனம் வருந்துவதாகவும் தமக்குப் பெரிய … Read more