அமெரிக்காவை தாக்கிய புயல்

0
211
ஹன்னா என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவில் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது.
இதில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. புயலை தொடர்ந்து டெக்சாசின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புயல், மழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. புயல் தொடர்பாக டெக்சாஸ் மாகாணத்தில் 32 பகுதிகளுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள மாகாண ஆளுநர் கிரேக், இந்த புயலை எதிர்கொள்ள கொரோனா தடையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஹன்னா புயலால் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை.
Previous articleவங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்
Next articleவடகொரியாவில் முதல் கொரோனா தொற்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here