தன்னுடைய தவறை ஒத்துக்கொண்ட டிரம்ப்

பாப் உட்வார்ட்டிடம் டிரம்ப் பேசும் போது, டிரம்ப் உட்வார்ட்டிடம் கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார பேரழிவில் இருந்து வெற்றி பெறுவேன் என்றும், பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டதாகவும் கூறினார். ‘நான் இந்த நாட்டுக்கு ஒரு உற்சாக வீரர். நான் எங்கள் நாட்டை நேசிக்கிறேன். மக்கள் பயப்படுவதை நான் விரும்பவில்லை.  இந்த நாட்டையோ அல்லது உலகத்தையோ வெறித்தனமாக விரட்டப் போவதில்லை. நாங்கள் நம்பிக்கையைக் காட்ட விரும்புகிறோம்; நாங்கள் வலிமையைக் காட்ட விரும்புகிறோம். … Read more

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது. சர்வதேச அரசியல் ராஜதந்திரம் மற்றும் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய … Read more

78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கிய காட்டுத்தீ

லிபோர்னியாவில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் … Read more

கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரச்சாரங்கள்  சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபரானால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று தெரிவித்தார். கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் … Read more

அமெரிக்காவுக்கு ஏற்பட போகும் அவமானம் – டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களமிறங்கி உள்ளார். துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில்,  பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், எதிர்க்கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை தாக்கினார். கமலா ஹாரிசை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வர முடியாது என்றும் கூறினார். கமலா … Read more

வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் 33-ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர். கலிஃபோர்னியாவில்,காட்டுத் தீச் சம்பவங்கள் வழக்கமாக நேரும் காலம் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் உள்ள வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால், குறைந்தது 7 பேர் இறந்தனர்.  4,100க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள், 24 வெவ்வேறு தீச் சம்பவங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தொடரும் காட்டுத் தீச்சம்பவங்கள் 2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது சுமார் 1.5 மில்லியன் … Read more

கொரோனா காலத்திலும் நெகிழ செய்த பூ வியாபாரிகள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள தாம்சன்  ஸ்டிராபெர்ரி பண்ணையில் வழக்கமாக, பழவகைகளும் பரங்கிக்காய்களும் வளர்க்கப்படும். வித்தியாசமாக, பண்ணையில் உள்ள 22 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க சூரியகாந்திச் செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன! பூக்களைப் பார்க்க, சுற்றுவட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் திரண்டு வருகின்றன. பார்வையாளர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பூக்களிடையே இடைவெளி இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது! பூக்கள் 15-க்கும் மேற்பட்ட திடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பருவம் கடந்துகொண்டிருந்தது. ஆனால் கிருமித்தொற்று மறைவதாகத் தெரியவில்லை. பூக்களைப் பார்த்தாவது மக்களின் முகங்களில் சிரிப்பு … Read more

அமெரிக்காவில் சரமாரியாக அதிகரிக்கும் போகும் கொரோனா

மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களான கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்ஸஸ் ஆகியவற்றில் நோய்த்தொற்று குறையத் தொடங்கியுள்ளது. நீண்ட விடுமுறையான இவ்வார இறுதியில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்குப் புதிதாக 44,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவின் 22 மாநிலங்களில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வாரம் நீண்ட விடுமுறை என்பதால் மக்கள் குடும்பங்களுடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது 22 மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது, … Read more

டிரம்பால் மட்டுமே அமெரிக்காவை காப்பற்ற முடியும்

அமெரிக்காவில் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தநிலையில் டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின் … Read more

அமெரிக்காவில் அரங்கேறிய மனதை உலுக்கும் சம்பவம்

அமெரிக்காவில் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரில் இருந்த இப்ரி காம்ஸ் என்கிற 3 வயது பச்சிளம் குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது. மேலும் கார் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டை … Read more