டிரம்ப்பை பற்றி அவரது மனைவி இப்படி கூறினாரா?

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் நேற்று முன்தினம் குடியரசின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் நான் இங்கே இருக்கிறேன். ஏனென்றால் என் கணவர் நமது ஜனாதிபதியாகவும், தளபதியாகவும் இன்னும் 4 ஆண்டுகள் இருக்க வேண்டும். … Read more

இந்திய பெண் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை

இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார். அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர்.அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவில் மீண்டும் இப்படி ஒரு பிரச்சினையா?

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் காவல்துறையால் சுடப்பட்ட கறுப்பின ஆடவர் முடமாகிவிட்டதாகவும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் அவருடைய குடும்பத்தாரும் வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்பில் 3வது நாளாக கெனோஷா (Kenosha) நகரின் லேக்ஃப்ரொன்ட் டவுனில் (Lakefront Town) கலவரம் தொடர்ந்ததால், அம்மாநில ஆளுநர் நெருக்கடிநிலையை அறிவித்தார். நகரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டத் தேசியக் காவல்படையை இறக்கப்போவதாக அவர் கூறினார். இதற்கிடையே, பொதுமக்கள் நிதானமாக இருக்குமாறு பிலேக் (Blake) எனப்படும் அந்த 29 வயதுக் கறுப்பின ஆடவரின் தாய் கேட்டுக்கொண்டார். 6 … Read more

அமெரிக்காவை சோதிக்கும் இயற்கை சீற்றங்கள்?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த … Read more

தன்னுடைய குடும்பத்தையே கொன்ற தடகள வீரர்?

அமெரிக்காவில்  குடியேறிய  இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரர் இக்பால் சிங். 62 வயதான இவர் 1983-ம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர். பின்னர் அமெரிக்காவில் உள்ள   நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வந்தார். இவருடன் தாய் மற்றும் மனைவி இருந்ததாக கூறப்படுகிறது. டாக்சி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய் மற்றும் மனைவி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் தன்னைத்தானே … Read more

19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன. அமெரிக்க அரசு நிர்வாகம் நிதி உதவி வழங்காததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆயிரம் … Read more

அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், எதிர்த்தரப்பினர் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெறக்கூடும் எனத் தமது குடியரசுக் கட்சியினரை எச்சரித்துள்ளார். கொரோனா சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கர்களை ஏமாற்றும் முயற்சியில் எதிர்த்தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அவர் குறைகூறினார். ஜனநாயகக் கட்சி நடத்திய மாநாட்டில், எதிர்மறை அம்சங்கள் நிறைந்திருந்ததாகக் குடியரசுக் கட்சியினர் கூறினர். ஆனால், தங்களது மாநாடு அவ்வாறு இல்லாமல் நடைபெறுமென அவர்கள் உறுதி கூறினர். இதுவரை வெளியிடப்பட்ட முன்னோடிக் கருத்துக் கணிப்புகளில், ஜனநாயகக் … Read more

பாகிஸ்தானின் சதியை அம்பலமாக்கிய இந்தியா

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் மிஷன் ஒரு டுவீட்டில் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் பாதுகாப்பு சபையின் விவாதத்தில் “பயங்கரவாத நடவடிக்கைகளால் முன்வைக்கப்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள்” குறித்து பொதுச்செயலாளரின் அறிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என் கூறியது. ஐ.நா.வில் இந்தியா அதனை  சுட்டிக்காட்டி, ஐ.நா.வுக்கு பாகிஸ்தான்  வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் கண்டிருக்கிறோம்,  மேலும் இந்திய தரப்பில் கூறும் போது ஐக்கிய நாடுகளால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தான் அதிக அளவில் உள்ளனர்.  மற்றும் அனுமதிக்கப்பட்ட … Read more

பிளாஸ்மா சிகிச்சை முழுமையான தீர்வை தராது?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிளாஸ்மா சிகிச்சை என்பது சோதனைக்குரியது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதர அமைப்பு அதுவே முடிவானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்மா சிகிச்சை அவசரகால … Read more

பிளாஸ்மா சிகிச்சைக்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல்

உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சை முறையை பின்பற்றுகின்றன. இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பின் உச்சமாக திகழும் அமெரிக்காவில் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு நேற்று முன்தினம் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) ஒப்புதல் … Read more